17. திடீர் வருவாய்
‘திடீர்ன்னு உனக்குப் பத்து கோடி ரூபாய் கிடைச்சா என்ன செய்வே?’ என்பது ஒரு மகிழ்ச்சியான கற்பனைக் கேள்வி, நாம் எப்படிப்பட்டவர்கள், உள்ளுக்குள் ஆழமாக எதை விரும்புகிறோம், நம்முடைய அப்போதைய கவலைகள், நீண்டகாலக் கவலைகள் என்னென்ன என்பதையெல்லாம் வெளிப்படுத்தக்கூடிய உளவியல் சிந்தனை.
உண்மை வாழ்க்கையில் அப்படிப் பத்து கோடி ரூபாயெல்லாம் ‘திடீர்ன்னு’ கிடைத்துவிடுவதில்லை. ஆனால், நடுத்தரமான, ஓரளவு பெரிய தொகைகள் நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மிடம் வரத்தான் செய்கின்றன. அவற்றை நாம் என்ன செய்கிறோம் என்று சிந்தித்தால் ஒரு முதன்மையான பாடத்தைப் பெறலாம்.
ஆங்கிலத்தில் இப்படித் திடீரென்று எதிர்பாராமல் வரும் பணத்தினை ‘Windfall’ என்கிறார்கள். நாம் அதைத் ‘திடீர் வருவாய்’ என்று அழைக்கலாம்.
Add Comment