நண்பர் ஒருவரது தாத்தா, ஐம்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மாத இதழின் பதிப்பாளராக இருந்திருக்கிறார். இப்போது அவரது தாத்தாவும் இல்லை; அந்தப் பத்திரிகையும் இல்லை. நண்பர் தன் சொந்த ஆர்வத்தில் அந்தப் பத்திரிகையின் சில பழைய பிரதிகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். படித்துப் பார்த்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. அந்தப் பத்திரிகை நின்றிருக்கக் கூடாது என்று தோன்றியது. கதைகளும் கட்டுரைகளும் அவ்வளவு நன்றாக இருந்தன.
நண்பருக்கும் அந்த வருத்தம் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? ஒன்று வேண்டுமானால் செய்யலாம். அந்தப் பழைய பத்திரிகைப் பிரதிகளை ஸ்கேன் செய்து இணையத்தில் போட்டு வைக்கலாம். ஆனால் செலவு அதிகமாகுமே என்று கவலைப்பட்டார். தவிர அவருக்கு அதெல்லாம் செய்யவும் வராது என்று சொன்னார்.
‘அவசியமே இல்லை. இவற்றை உங்கள் கைப்பேசியில் கிடைக்கும் இலவசச் செயலிகளைக் கொண்டே ஸ்கேன் செய்து பி.டி.எப் கோப்புகளாக்கி வைக்கலாம்’ என்றவுடன் குஷியாகிவிட்டார்.
Add Comment