Home » சந்துக்குள் ஒரு சமுத்திரம்
சந்தை

சந்துக்குள் ஒரு சமுத்திரம்

இந்தியாவில் எலக்டிரானிக்ஸ் பொருள்களுக்கான பெரும் சந்தைகளைப் பட்டியலிட்டால் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது சென்னையில் உள்ள ரிச்சி தெரு.

அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எதிரில் எந்தச் சந்தில் சென்றாலும் மின்னணு சாதனங்கள் நிறைந்த கடைகள் உங்களை வரவேற்கும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு எளிய உபாயம் மெட்ரோ. அரசினர் தோட்ட நிறுத்தத்தில் இறங்கி மேலே ஏறினால் அது ரிச்சி ஸ்ட்ரீட்டில் தான் கொண்டு விடும்.

பெயரளவில் மின்னணு சாதனங்களின் சந்தையை ரிச்சி ஸ்ட்ரீட் என்று குறிப்பிடுகிறோம். அது ஒரே ஒரு தெருதான். ஆனால் அதைச் சுற்றிலும் உள்ள எல்லா தெருக்களிலும் மின்னணு சாதனக் கடைகள் மட்டுமே இருக்கின்றன. உதாரணமாக முகம்மது ஹூசைன் தெரு, மீரான் சாஹிப் தெரு (இது முன்னொரு காலத்தில் திரைப்பட விநியோகஸ்தர்களின் பேட்டை அல்லது கோட்டை), நரசிங்கபுரம் தெரு, வாலர்ஸ் சாலை, அதிபட்டன் தெரு என்று கால் வைக்கும் சந்தெல்லாம் மின் மயம் தான். எந்தத் தெருவையும் நாம் தேடிச் செல்ல வேண்டாம். காலைக் கொடுத்தால் போதும். தெருக்களே நம்மை அழைத்துச் செல்லும் அல்லது இழுத்துக்கொள்ளும்.

நடமாடவே கஷ்டப்படும் குறுகலான தெருக்கள் அவை. இரு சக்கர வாகனங்கள் வரிசைகட்டி அந்தச் சந்துகளையும் அடைத்துக் கொண்டு நிற்கின்றன. அங்கு தோராயமாக இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. அநேகமாக ஒரு கடைக்கு ஒரு பணியாள், ஒரு முதலாளி என்று வைத்துக் கொண்டு வண்டிக் கணக்குப் போட்டுப்பார்த்தாலும் ஐந்தாயிரம் வண்டிகளுக்கு இடம் கொடுத்துக்கொண்டு பிதுங்கிப் போய் நிற்கிறன தெருக்கள்.

மனிதர்களே உள்ளே சென்றுவர சிரமப்படும் வீதியில் வண்டிகள் உள்ளே செல்ல முடியாது. சைக்கிளில் வைத்துக் கட்டி சரக்கெடுத்துச் செல்வதை பார்க்க முடிந்தது. அதில்லாமல் சிறிய அளவில் சரக்கேற்றும் உருளிகளைப் பயன்படுத்தியும் கொண்டு செல்கிறார்கள். சந்துகளே இப்படி இருக்கும் போது இத்தனை ஆயிரம் கடைகளும் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்பது உங்கள் யூகத்திற்கே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • என்னுடைய முதல் பிக்பாக்கெட் கொடுத்த தெரு – கேசட் வாங்கப்போனேன், கேஷ் தொலைத்து, மாம்பலம் வரை நடந்தேன். (Ritchie) ரிச்சி தெரு made me poorer.

  • கள ஆய்வு செய்து எழுதிய கட்டுரை, அருமை. பல முறை ரிச்சி தெருவுக்குச் சென்றிருந்தாலும் புது விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

    தெருவின் பெயர்க் காரணத்தைச் சில சென்னையில் வரலாறு ஆர்வலர் திரு ஸ்ரீராம் இங்கே எழுதி இருக்கிறார்:
    Ritchie Street (off Mount Road): HCM: Ritchie was the Registrar of the High Court.
    https://sriramv.com/2010/06/08/some-street-names-in-chennai/

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!