Home » சண்டைக் களம் – 8
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 8

viii. ஈரான்

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அகாமனீசியப் பேரரசு பெரிதாக இருந்தது. லிபியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை, பாரசீக வளைகுடாவிலிருந்து அர்மீனியா வரை பரவியிருந்தது. பாரசீகப் பேரரசு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பரவலாக்கம் வரையில் தன் எல்லையில் பல மாற்றங்களை ஏற்றது. பதினான்காம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பைக் கண்டது. தைமூர் அரசுக்குப் பின், ஷா அப்பாஸ், ருஸ்தம் கான், நாதிர்ஷா எனப் பல தலைமைகளை பாரசீகம் கண்டது. பாரசீக அரசு, பிறகு ஈரானிய அரசாகியது.

சமகால ஈரானிய எல்லை, வடக்கில் அர்மீனியா, துர்க்மெனிஸ்தான், தெற்கில் பாரசீக வளைகுடா, கிழக்கில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைகளையும், மேற்கில் துருக்கி ஈராக் எல்லைகளையும் கொண்டது. ஈரானின் இன்றைய இந்த எல்லைக்குள் இருக்கும் சில சண்டைக்கலைகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்பவை.

ஈரானில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, அவர்களுடைய சண்டைக்கலைகளும் தங்கள் ஈரானிய வேர்களை முன்னிறுத்தி வளர்ந்தன. இஸ்லாமிய வழிமுறைகளில் ஏற்பட்ட மாறுதல்களையும் ஏற்று ஷியா வழிமுறையின் பகுதியாகவும் தன்னுடைய சண்டைக்கலையை ஈரான் அமைத்துக்கொண்டது. ஈரானில், மற்போர் பாரம்பரியக் கலையாக மட்டுமல்லாமல் புனிதக் கலையாகவும் போற்றப்படுகிறது. இந்திய, ஈரானிய மற்போர்ப் பெயர்கள் ஒன்றுபோலவே ஒலிக்கும். துருக்கியில் குரேஷ் எனச் சொல்லப்படும் மற்போர், ஈரானிலும் இந்தியாவிலும் குஷ்தி எனச் சொல்லப்படுகிறது. தமிழில் பயில்வான் என்பது ஈரானிலும் இந்தி, உருதுவிலும் பெஹல்வான். பெஹல்வானி என்பது பொதுவான மற்போர்ப் பயிற்சியைக் குறிக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!