Home » கலகக்கார கன்னியாஸ்திரிகள்
உலகம்

கலகக்கார கன்னியாஸ்திரிகள்

‘கைதிகள் தப்பியோட்டம்’ என்பது நாம் அவ்வப்போது கேள்விப்படும் செய்திதான். ஆனால் ‘கன்னியாஸ்திரிகள் தப்பியோட்டம்’ என்ற அண்மைச் செய்தியைக் கேள்விப்பட்டீர்களா?

ஆஸ்திரியா நாட்டில் கன்னியாஸ்திரிகள் மூவர் தப்பியோடிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் எங்கிருந்து தப்பித்து எங்கு சென்றார்கள்?

சகோதரி ரீட்டா (வயது 82), சகோதரி ரெகினா (86), சகோதரி பெர்னாடெட் (88) ஆகிய மூவரும்தாம் தப்பியோடிய கன்னியாஸ்திரிகள். தாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர் இல்லத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேல் அவர்களது இல்லமாக விளங்கிய கத்தோலிக்க மடத்துக்குத் தப்பியோடியுள்ளனர். பல ஆண்டுகளாக அங்கு இயங்கிவந்த பள்ளியில் அவர்கள் மூவரும் ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.

ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சால்ஸ்பர்க் நகரத்தில் Schloss Goldenstein (கோல்டன்ஸ்டீன் கோட்டை) என்ற பழமை வாய்ந்த கட்டடத்தில் கத்தோலிக்க மடம் ஒன்று சில நூற்றாண்டுகளாக இயங்கிவந்துள்ளது. அவ்வளாகத்தில் இயங்கிவந்த பள்ளி சென்ற ஆண்டு மூடப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!