ரஜினி
நூறாண்டுகளுக்கு மேலாக மக்களை மகிழ்விக்கும் ஊடகமாகத் திரைப்படங்கள் விளங்கி வருகின்றன. இந்த நூறாண்டுகளில் நடிகர் நடிகையர்கள் குறித்த ஒரு கவர்ச்சி ரசிகர்களுக்கு என்றுமே இருந்து வந்திருக்கிறது. தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, திலீப் குமார், ராஜ்கபூர், ராஜேஷ் கன்னா, என் டி ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர், மது என அனைத்து மொழிகளிலும் அந்தந்தக் காலங்களில் வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் இருக்கிறார்கள்.
எல்லாக் காலகட்டங்களிலும் ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட நடிகர் அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருப்பார். இருந்திருக்கிறார். தமிழில் எம்ஜிஆர், தெலுங்கில் என் டி ஆர், கன்னடத்தில் ராஜ்குமார், இந்தியில் திலீப் குமார் இப்படி. இப்போதுள்ள ரசிக மொழியில் சொல்ல வேண்டுமெனில் இவர்கள்தான் அந்தந்தக் காலகட்டங்களின் சூப்பர் ஸ்டார்கள்.
எழுபதுகளுக்குப் பிறகான காலகட்டத்திலிருந்து ஐம்பது ஆண்டுகள் பார்த்தால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்குச் சொந்தமானவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அவரோடும் அவருக்குப் பிறகும் அவர் போல ஒவ்வொரு மொழியிலும் மிகவும் சாதாரணமாக அறிமுகமாகி இந்த நிலையை எட்டிய சில நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், ஷாருக்கான், விஜய்.










Add Comment