Home » மத்திய பட்ஜெட்: நம்பிக்கையும் நிதர்சனமும்
நம் குரல்

மத்திய பட்ஜெட்: நம்பிக்கையும் நிதர்சனமும்

2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த பட்ஜெட்டின் ஒட்டுமொத்தச் செலவினம் 53.5 லட்சம் கோடி ரூபாய். இது கடந்தாண்டை விட 7.7% அதிகம். ஒன்றிய அரசின் மூலதனச் செலவினங்களுக்கான தொகை சென்றாண்டை விட ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 12.2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை நிதி, நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கடுத்து, பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 15.2% அதிகரிக்கப்பட்டு 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமான தொகை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவிருக்கும் பாதுகாப்புத் தளவாடங்களின் கொள்முதலுக்காகச் செலவிடப்படும்.

அடுத்தபடியாக, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு 10% நிதி அதிகரிக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, இந்தியாவை உலகளாவிய மருத்துவத் துறையின் மையமாக மாற்றுவதற்கான ‘பயோ சக்தி’ எனப்படும் புதிய திட்டத்தைத் தொடங்க பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரிக்கு முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!