க்ளாசிக்
நாட்டுக்கு ஒரு நல்லவன் தந்த தோல்விக்குப் பிறகு உடனடியாக ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ரஜினி. அவர் நடித்த மனிதன் படம் வெளியானபோது உடன் வெளியான படம் நாயகன். கமல்ஹாசன் நடிக்க, மணிரத்னம் என்ற வளர்ந்து வரும் இயக்குநர் அதை இயக்கியிருந்தார்.
நாயகனைப் பார்க்க விரும்பினார் ரஜினி. அவருக்காக அந்தப் படம் ஒரு ப்ரீவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. நிச்சயமாக ஒரு வெற்றிப்படத்தை மட்டும் பார்க்கவில்லை என்று அப்போது அவர் உணர்ந்தார். நாயகனின் தந்த போதை இதுவரை நான் அனுபவித்ததிலேயே உச்சபட்ச போதை என்று பலமுறை பதிவு செய்திருக்கிறார்.
அதை இயக்கிய மணிரத்னத்துடன் சேர்ந்து ஒரு படம் செய்ய வேண்டுமென முடிவுசெய்தார். இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரரான ஜி வெங்கடேஸ்வரன் ரஜினியின் நெருங்கிய நண்பர். மூவரும் இணைந்து ஒரு படம் செய்வதாக முடிவானது. போர் முழக்கம் என்று அந்தப்படத்துக்குப் பெயர் என்று செய்தி கசிந்தது.










Add Comment