பஞ்ச்
அமிதாப் பச்சன், கோவிந்தா, ரஜினிகாந்த் மூவரும் இணைந்து ‘ஹம்’ என்றொரு இந்திப் படத்தில் நடித்தனர். முகுல் ஆனந்த் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் ‘சும்மா சும்மா தே தே’ என்ற பாட்டுக்கும், இந்த மூன்று கதாநாயகர்களின் நடிப்புக்கும் நன்றாக ஓடி வெற்றி பெற்றது.
அந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்திருந்தார் ரஜினிகாந்த். அதில் மாற்றங்கள் செய்து ஒரு கதையைத் தயார் செய்து தரச் சொன்னார். அமிதாப் நடித்த வேடத்தில் அவர் நடிக்க, மற்ற இரண்டு வேடங்களைத் தங்கைகளாக மாற்றினார். அதுதான் பாட்ஷா.
அந்தப் படத்தை எடுக்கும்போது, அது தமிழ் சினிமாவைப் புரட்டிப் போடும் ஒரு படமாக வரப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ரஜினியின் வழக்கமான இன்னொரு மொழிமாற்றப் படம் என்றே நினைத்தார்கள். ஆனால் நாயகன் பார்த்த நாளிலிருந்து ஒரு மும்பை தாதாவாகத் தன்னுடைய பாணியில் நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தார் ரஜினிகாந்த்.










Add Comment