Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 10
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 10

உடலும் உள்ளமும்

வெற்றிகரமான நடிகர்கள் உடல்நிலையைப் பேண வேண்டியது மிக முக்கியம். ஆனால் தான் நடித்த முதல் படத்திலிருந்தே சிகரெட் பிடிப்பதை ஒரு தவம் போலச் செய்து வந்தவர் ரஜினிகாந்த். அது அவருக்கு ஓர் அடையாளமாகவும் இருந்தது. தான் புகை பிடிப்பதையும் தன்னுடைய மதுப் பழக்கத்தையும் அவர் என்றுமே மறைத்ததில்லை. மதுப்பழக்கம், சிகரெட், ஜர்தா என்று இவரிடமில்லாத பழக்கங்கள் கிடையாது. தொலைக்காட்சி பேட்டிகளில் கூட சிகரெட்டோடு பேட்டி கொடுத்தவர்கள் இரண்டே நடிகர்கள்தான். ஒருவர் ரஜினி, மற்றொருவர் ஷாருக்கான்.

‘என்னுடைய புகழ், பணம், ரசிகர் பட்டாளம் போன்றவற்றை என்னால் தாங்க முடியவில்லை. மன அழுத்தம் அதிகமாக இருந்தது. குடித்தால் மட்டுமே அதை மறக்க முடியும். அதனால்தான் சில காலம் என் நிலையறியாமல் இருந்திருக்கிறேன். சில மேடைகளில், விழாக்களில் நான் தவறாக நடந்து கொண்டதற்கு இதுதான் காரணம்’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி வெளிவந்த தகவல்களில் சில உண்மை. பல அப்பட்டமான பொய்கள். அதிகப்படியான உழைப்பு, அலைச்சல், டென்ஷன் காரணமாகச் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் ரஜினிகாந்த். இது அவர் நடிக்க வந்து புகழ் பெற ஆரம்பித்த தருணம். அவரை மனநலம் சரியில்லாதவர், இனிமேல் நடிக்க முடியாது, ஆத்திரக்காரர் என்றெல்லாம் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. ஆனால் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் சொல்ல முடியாத வேகத்தில் ஓர் ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தார். அது அவரது உடல்நலனைப் பாதித்தது. அந்தச் சூழலில்தான் அவருடைய திருமணமும் நடந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!