ஷாருக்கான்
ஷாருக்கான் என்பது ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு பெயரல்ல, அது ஓர் உணர்வு. இந்திப் படவுலகில் மற்ற அனைவரும் ஆக்ஷன், குடும்பம் என்று போய்க் கொண்டிருந்த வேளையில் ஓர் அழகிய புயல் போல் வந்தவர்தான் ஷாருக்.
நடிக்க வந்த புதிதில் அவருக்கு யாரும் வாய்ப்புகளைக் கொட்டிக் கொடுத்து விடவில்லை. அவர் வந்த பாதை மிகவும் கடினமானது. அதனால்தான் பெரும்பான்மையான ரசிகர்கள் இந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர் இளைஞர்களின் டார்லிங் என்பது ஒருபுறம் இருக்க, தாய்மார்களின் செல்ல மகனும் கூட. திரையில் இவரைப் போலக் கண்கலங்க வைத்தவர்கள் சமீப காலத்தில் யாரும் கிடையாது. கபி குஷி கபி கம், கல் ஹோனா ஹோ, மை நேம் இஸ் கான். சக் தே இந்தியா, முஹபதத்தேன் போன்ற படங்கள் உதாரணம். அவற்றில் இருக்கும் ஓர் உண்மைத் தன்மை, பரிதவிப்பு, அங்கலாய்ப்பு, கையறு நிலை போன்றவை மொத்தமாகப் பார்ப்பவர்கள் மேல் கடத்தப்படும்.










Add Comment