இளவரசர் அல்லது இளவரசி என அழைக்கப்படுவதற்கு ராஜ குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். பிரித்தானியாவில் ஆட்சியில் இருக்கும் ராஜா அல்லது ராணியின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளுமே இப்படி அழைக்கப்படுவார்கள். இது பொதுவான ஒரு விதி. பிரித்தானிய அரச குடும்பத்தில் பிறந்தோருக்கு வேறு பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டாலும், பிறப்பினால் வந்த இளவரசர் இளவரசி பெயர்கள் நிலைத்து நிற்பவை.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகனும், தற்போதைய பிரித்தானிய ராஜா சார்லஸின் தம்பியுமாகிய ஆண்ட்ரூ, அண்மையில் இந்தப் பிறப்பினால் வந்த இளவரசர் பட்டத்தை இழந்தார். அதற்கு முன்னரே அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த டியூக் ஆஃப் யோர்க் எனும் பட்டத்தையும் இழந்தார். அத்துடன் அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ அங்கத்தினராக அரச பணிகளில் ஈடுபடும் தகுதிகளையும் இழந்தார். இவை ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டன. தற்போது எந்தவித அரச தலைப்புகளும் இல்லாமல் சாதாரண பொது மக்களைப் போல அவரது முழுப் பெயரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-விண்ட்சர் என்றே அழைக்கப்படுகிறார்.
வரலாற்றில் இளவரசர் எனும் பெயர் நீக்கப்படுவது முன்னரும் நடந்திருக்கிறது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் இரண்டு இளவரசர்கள் எதிரியுடன் சேர்ந்து நின்றதால் பிரித்தானிய இளவரசர் எனும் பட்டத்தை இழந்திருக்கிறார்கள். இளவரசர் சார்லஸ் எட்வேர்ட், இளவரசர் ஏர்னெஸ்ட் அகஸ்டஸ் ஆகிய இருவர்தான் இப்படிப் பட்டத்தை இழந்தவர்கள்.















Add Comment