Home » ஆடாதே, பாடாதே; அடித்தாலும் அழாதே!
உலகம்

ஆடாதே, பாடாதே; அடித்தாலும் அழாதே!

ஆப்கனிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியைக் குறித்துப் புதிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. அதே சர்வாதிகாரம், பெண்ணடிமைத்தனம், மோசமான தண்டனைகள் என எல்லாமே அப்படியே தொடர்கின்றன. ஆனால் இதுவரை செய்த அராஜகங்களை மதத்தின் பெயரால் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்தது தாலிபன் அரசு. இப்போது அதற்கொரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.

பத்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, நூற்றுப் பத்தொன்பது தண்டனைச் சட்டங்கள் ஆப்கன் அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றன. தாலிபன் அரசின் தலைமை ஆட்சியாளரான முல்லா ஹிபதுல்லா அகுண்சடா அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தச் சட்டங்கள் ஆப்கன் முழுவதும் இருக்கும் நீதிமன்றங்களில் நடைமுறைக்கு வந்துள்ளன.

இனி சர்வாதிகாரம் என்ற போர்வையை விலக்கிவிட்டு, சட்டம் என்ற புதிய போர்வையின் கீழ் அராஜகங்களை தாலிபன்களால் தொடர முடியும். இந்தப் புதிய சட்டங்களைக் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தன் கவலையைத் தெரிவித்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!