‘ஐ ஆம் வெயிட்டிங்’
ஊரின் பெயர்களை வைத்துப் படம் எடுத்துக் கலக்கிக் கொண்டிருந்த இயக்குநர் பேரரசுடன் திருப்பாச்சி, சிவகாசி என்று தொடர்ந்து படங்கள் செய்தார் விஜய். தங்கை சென்டிமெண்டுடன் வந்த திருப்பாச்சி மிகப் பெரிய வெற்றி பெற்றாலும், சிவகாசி அந்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனாலும் முதலுக்கு மோசமில்லை என்ற அளவில் கடந்துவிட்டது. 2006இல் வந்த இன்னொரு ரீமேக் படமான ஆதி தோல்வியடைந்தது. அடுத்து சில தோல்விப்படங்களும் தொடர்ந்தன.
நமக்கு ரீமேக்தான் உசிதம் என்று மற்றொரு படத்தைக் கையிலெடுத்தார் விஜய். அசின் நாயகி, நாசர், ஸ்ரீமன், வடிவேலு, பிரகாஷ் ராஜ் எனக் கூட்டணி அமைத்தார். இயக்கம் பிரபு தேவா. படத்தின் பெயர் போக்கிரி. புரி ஜெகன்னாத் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம்.
2007 இல் வெளியானது போக்கிரி. பாடல்கள், சண்டைக்காட்சிகள், இறுதியில் போலிஸ் அதிகாரி என்று விஜய் நடிப்பில் அநாயாசமாகத் தூக்கிச் சாப்பிட்டிருந்தார். கோபத்தைத் தவிர எந்த உணர்ச்சியையும் அதிகம் காட்டாதவர் மகேஷ் பாபு. அதை அப்படியே ஒற்றி எடுத்திருந்தார் விஜய். படமும் மிகப்பெரிய வெற்றி.










Add Comment