“இவரு பிறந்தது,வளர்ந்தது எல்லாமே கடலூர்,சிதம்பரம் பக்கமுள்ள இளவடிங்கற ஊர்லங்க. அங்க இவருக்கு மன்னாருன்னு பேரு. பள்ளிப் படிப்பு முடிச்சிருக்காரு. இவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் போஸ்ட்மேன் வேலை கிடைச்சிருக்கு. தபால்கள் அடங்கிய பையைச் சுமந்துக்கிட்டு ஓட்டமும் நடையுமாக ஊர் ஊராகச் சுற்றும் வேலை...
Tag - ஆன்மிகம்
இராஜராஜ சோழனின் வம்சத்தில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மிகவும் வருத்தத்தில் இருந்தான். காரணமற்ற சஞ்சலமும் விரக்தியும் அவனை ஆட்கொண்டிருந்தது. வருத்தத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வம்சவிருத்திக்கென்று ஒரு வாரிசு இல்லாதது. இன்னொன்று என்னவென்று தெரியாத பிரம்மஹத்தி தோஷம் அவனை ஆட்கொண்டுள்ளது என்று...
பாரியென்னும் குறுநில மன்னன் சிறந்த வள்ளல் என்று பெயர் பெற்றிருந்தான். பெருநில மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே எந்த விஷயத்திலும் ஒற்றுமை இருந்ததில்லை. ஆனால் பாரி மன்னன் பெற்றிருந்த நற்பெயரும், பறம்புமலையின் இயற்கை வனப்பும், அதன் விளைபொருட்களின் சுவையும், தரமும் அவர்களின் கண்களை உறுத்தின...
பக்தனொருவன் பெற்றோர் மீதும், இறைவன் பாண்டுரங்கன் மீதும் அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு இறைவன் பாண்டுரங்கன் மீது இருந்த பக்தியைவிட, ஒரு சதவீதம் அதிகமான அன்பும், மரியாதையும் அவனுடைய பெற்றோர் மீது இருந்தது. இந்தச் சிறப்பினை உலகறியச்செய்ய...
“போன வாரம்தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இல்ல….? அவர் வந்துட்டுப் போனார். அதுக்கு முந்தி யோகிபாபு, சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ராதாரவி, தாடி பாலாஜி அப்புறம் அந்த அய்யப்பன் பாட்டு பாடுவார்ல…. வீரமணி ஐயா அவர் வந்துட்டு போனார். இது தவிர முக்கியமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வந்து போய்ட்டு...
பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில் அவர் எப்போதாவது உரையாடும் போது, எங்கிருந்து வருகிறாய்? என வினவுவாராம். சேலத்தில் இருந்து வருகிறேன் என்று சொன்னால், என் தம்பி ஒருத்தன் அங்கே...
மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரகுமார் யாரென்று தெரியுமல்லவா. தமிழ் சினிமாவில் மிக அரிதாக, அழகாக, நெகிழ்வாகக் காண்பிக்கப்படும் ஒரு உறவு மாமனார்- மருமகன் உறவு. இத்தனையாண்டுகள் ஆனாலும் மௌனராகம் படத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறிய சம்பாஷனைகள் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் அதன் அரிதான...
சாதாரணமாக இருப்பதற்கும், எளிமையாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எளிமை என்பது இடம், பொருள், ஏவலைப் பொறுத்து ஆங்காங்கே மாறுதலுக்கு உட்படுகிறது. ஆலயங்கள் என்று எடுத்துக்கொண்டால், வானளாவிய கோபுரங்கள், பெரிய,பெரிய மூர்த்திகள், அழகிய சிற்பங்கள், ஏக்கர் கணக்கில் நிலங்கள், பெரிய தெப்பக்குளம்...
நகரம் முழுவதும் தென்னை மரங்களும் வயல்வெளிகளும் ஆறுகளும் குளங்களும் எனப் பசுமை நிறத்தால் சூழப்பட்ட ஒரு மாவட்டம் கன்னியாகுமரி. ஆனால் இரண்டு நாட்கள் இந்த மாவட்டத்தின் சாலைகள் காவியால் போர்த்தப்பட்டிருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் காவி வேட்டி அணிந்து காவித்துண்டைப் போர்த்திய ஆண்களும், காவிப்...
ஆடம்பரமான ஜமீன் குடும்பம். ஆழ்ந்து அனுபவிப்பதற்கு எக்கச்சக்கமான சொத்து. ஆள், அம்பு, சேனை வசதிகளோடு, சொந்த பந்தத்தோடு கூடிய ராஜ வாழ்க்கை. இப்படியான கருவூர்கோட்டை ஜமீன் பரம்பரையில், 1859ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28-ம்தேதி புனர்பூச நட்சத்திரத்தில், ஓர் ஆண்வாரிசு பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு...