கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இலக்கியங்கள் இந்தக் காலகட்டத்தை வசந்தகாலம் என்று கொண்டாடுகின்றன. மரம், செடி, கொடிகளில் புதிய தளிர்கள் துளிர்த்து, பூக்கள் மலர்ந்து, தாவரங்கள் புத்துணர்ச்சி பெறும் காலம் இது. இந்த சீதோஷ்ண மாறுதல் இயற்கைக்கு ரம்மியத்தை அளித்தாலும், மனித உடலுக்குப் புதுப்புது உபாதைகளைக்...
Author - சு. செல்வமணி
![]()
1998ஆம் ஆண்டின் மே மாதம் 11-13 தேதிகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. இந்தியா தனது இரண்டாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது இந்தத் தேதிகளில்தான். ராஜஸ்தானில் உள்ள இந்திய ராணுவத்தின் சோதனைத்தளமான பொக்ரானில் சோதனை நடத்தப்பட்டது. ஐந்து தொடர் சோதனைகள் கொண்ட இந்த நிகழ்வுக்கு இந்திய...
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து. ஏறுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் தங்கத்துக்கு அடுத்த ஆபரண உலோகமாக இருக்கும் வெள்ளியின் விலை மட்டும் தேமே என அமைதியாக இருந்தது. அப்படிப்பட்ட வெள்ளியின் வரலாற்றில் கடந்த 2025 டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ஒரு பொன்னாள். அன்று வெள்ளி ஒரு...
2025 ஜனவரி பிறந்தவுடன் மனத்தினில் இருந்த எண்ணமெல்லாம் இந்த ஆண்டு புத்தகம் எழுதிவிடவேண்டும் என்பதே. அதற்கான முனைப்பில் பல்வேறு தலைப்புக்களில் சிந்திப்பதும், அதனைச் சீர்செய்வதுமாய் இருந்தேன். என்னுடையது முதல் புத்தகம், எனவே வாத்தியாரின் ஆலோசனைப்படி, அவர் காட்டும் வழியிலேயே அதனை ஆரம்பிக்க வேண்டும்...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் திருக்கோயில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தலம். சிவனும் ஹரியும் ஒன்றுதான் என்னும் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு இந்தக் கோயில். இறைவன் சங்கரலிங்கம் – சங்கரநாராயணர், இறைவி கோமதி அம்மன் என்கிற ஆவுடையம்மன். இந்தக் கோயில்...
கர்நாடகாவின் தெற்குப் பகுதி கிராமங்களிலும், கேரளாவின் எல்லையோரக் கிராமப்புறங்களிலும் பூதகோலா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமான இந்த நிகழ்ச்சிக்குப் பல நூற்றாண்டுப் பின்னணி உள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது பூதகோலா ஒரு வழிபாட்டு நிகழ்வு எனத் தோன்றினாலும், இதனுள் நடனம், இசை, பரவசம்...
ஒரு சினிமான்னா எல்லோரும் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி இருக்கணும். மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒருவரித் தகவல். ஆனால் இயக்குநர் பீம்சிங்குக்கு இதுதான் தாரக மந்திரம். தான் இயக்கிய அத்தனை திரைப்படங்களுக்கும் இதையே அடித்தளமாக வைத்துக்கொண்டு, கலைநயமிக்க பல வெற்றித் திரைப்படங்களைக் கட்டி...
ஆலயங்களில் நமது வேண்டுதல்களை மௌனமாக மனத்தில் பிரார்த்தித்துக்கொள்வோம். ஒருசிலர் வாய்விட்டுச்சொல்லி வேண்டுவதும் உண்டு. இவற்றுக்கு அப்பாற்பட்டு நமது கோரிக்கைகளை எழுத்துவடிவில் விண்ணப்பமாகக் கொடுத்து, அதனை மூலவரிடத்தில் வைத்துப் பூஜித்து, வேல், கம்பு, ஈட்டி ஆகியவற்றில் கட்டிவைத்து வேண்டுவது என்பது...
சேலம் மாநகரின் மையமான குகை பகுதியில், முனியப்பன் கோவில் தெருவை ஒட்டிய ஆற்றுக்குப் போகும் வீதியில் அமைந்துள்ளது கெரடி தாலீம். இது சுமார் 144 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம். கெரடி தாலீம் என்கிற பெயர் வித்தியாசமாக உள்ளதே என அதனை ஆராய்ந்தால் இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் கிடைக்கின்றன...
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்துக்கொண்டிருந்த திரு.இல.கணேசன், 15-08-2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சாவூரில் பிறந்த இவர், எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாத நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக 16-02-1945 அன்று...













