Home » ஈரான்

Tag - ஈரான்

உலகம்

வாய் (மட்டும்) உள்ள பிள்ளை

காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது...

Read More
உலகம்

காஸா: உயிரோடு விளையாடு

போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...

Read More
உலகம்

வீழ்ந்தது பஷார் ஆட்சி; வென்றது யார்?

சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...

Read More
உலகம்

ஆடும் வரை ஆட்டம்

ஐ.நா. நிர்வாகப் பணிக்குழுவை இஸ்ரேல் தடை செய்துள்ளது. “வடக்கு காஸா தற்போது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களனைவரும் இறக்கும் நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது.” என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ். இப்படி எத்தனையோ...

Read More
உலகம்

இஸ்ரேலின் புதிய ஜெரூசலம்!

அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...

Read More
உலகம்

இஸ்ரேல்: தடுக்க வழியற்ற இடர்

ஹமாஸை ஒழித்து பணயக் கைதிகளை மீட்கப் போரை ஆரம்பித்தது இஸ்ரேல். இரு இலக்கு. ஒர் ஆண்டு. 40000க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்று குவித்த பிறகும் இலக்கை அடையவில்லை. அதனாலென்ன புதிய இலக்குடன் லெபனான், ஈரான் பக்கம் போகலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் படுகொலைகளைத் தொடர்கிறது இஸ்ரேல்...

Read More
உலகம்

கொமேனியின் தலைப்பாகை

மே 19-ஆம் தேதி ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்ஸி எதிர்பாராதவிதமாய் விமான விபத்தில் கொல்லப்பட்ட போது அதுவரை அணிந்திருந்த மத்தியக் கிழக்கு தற்காலிக தாதா மாஸ்கை கழற்றி வைத்தது ஈரான். “சற்று நில்லுங்கள் தம்பிகளே! உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று தன் ப்ரொக்ஸிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின்...

Read More
உலகம்

ஒரு விபத்து, ஒரு மரணம் – ஒரு கொலை?

தாடியும் தலைப்பாகையுமாகக் கருப்புநிற பி.எம்.டபிள்யு. காரில் வந்திறங்கியது அந்த மூவர் குழு. ஒரு மத நீதிபதி, ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர். ஊருக்கு வெளியே அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையின் கைதிகள், இவர்களை மட்டுமே சந்தித்தனர்- கடைசியாக. ஒவ்வொருவராக வரிசையில் வந்தனர்...

Read More
உலகம்

ஓயா ஊழலும் தீராத நல்லுறவும்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார். தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான்...

Read More
உலகம்

ஈரான் நடத்திய ஒன் டே மேட்ச்

பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!