துப்பாக்கியால் பேசியவர்கள் தொழிலதிபர் விஜய ரெட்டியின் அலுவலகம் வந்துவிட்டது. ஜீப்பிலிருந்து இறங்கினார் காவல் ஆய்வாளர் வேணி. அவர் கையாளப்போவது ஹை ப்ரொஃபைல் கேஸ். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சிறிது அலட்சியம் நேர்ந்தாலும் நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் அவமானப்பட நேரிடும் என்பதை அவரறிவார்...
Tag - தடயவியல்
மூழ்கியவர்கள் அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள பொங்கம் கிராமத்தில் கலவரம் வெடித்தது. கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இராணுவத்தினர் வன்புணர்ந்து கொன்றுவிட்டார்களாம். செய்தி கதிர்வீச்சாய்ப் பரவியது...
உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார் அவளது தாத்தா. பேத்தி கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனார். தன்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தனது ஆசிரியரிடம் சரிபார்ப்பதற்காகக் காட்டியுள்ளாள் அச்சிறுமி...
பூச்சிகளைப் படிக்கும் கலை ‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட வில்லன்களுக்கு வில்லன் இந்த ஈ தான். இவற்றுடன் வண்டுகளும் கைகோர்த்துக்கொள்கின்றன. புழு என்பது ஈயின் குழந்தைப்பருவம். புழுக்கள், ஈக்கள், வண்டுகள் போன்றவை பூச்சி...
பல்லைப்பார்த்து பதிலைச்சொல் டிசம்பர் மாதம் என்றாலே நமக்கு உள்ளூர பயப்பந்து உருளத்தொடங்கிவிடுகிறது. சில டிசம்பர் மாதங்கள் நம்மை அப்படிப் படுத்தி எடுத்திருக்கின்றன. ஈராறு வருடங்களுக்கு முந்தைய டிசம்பர் மாதமது. அது நம் மனங்களில் விட்டுச்சென்ற வடு இன்னும் ஆறவில்லை. நாட்டின் தலைநகரம். நண்பனுடன்...
காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று...
அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...
கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...
மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...