Home » நாவல் » Page 2

Tag - நாவல்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 4

4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்க்கிற எல்லோரிடமும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். டிக்கெட் புக் பண்ணியதற்கு மறுநாள் டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போய்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 3

3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 2

2 வேட்கை சைக்கிள் பயணம் பற்றி வசந்தகுமார் சொன்னதும் எதையுமே யோசிக்காமல் போவதென்று முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம், குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஆபீஸுக்குப் போகவேண்டாம் என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றிற்று. எட்டு மணிநேரம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 1

1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 100

100. பூரணம் வானில் பருந்தொன்று நெடுநேரமாக வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் வட்டம் விரியும் எல்லைக்குள் வந்த தருக்களெல்லாம் சட் சட்டென்று அசைவதை நிறுத்த ஆரம்பித்தன. காற்று ஒடுங்கியது. பட்சிகள் ஒடுங்கின. பகல் தனது நிறத்தைக் குறைத்துக்கொண்டு சாம்பர் பூசிப் புலப்பட ஆரம்பித்தது. மித்ரனின் நிறம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 99

99. ஒரு வினா ‘உனக்குச் சிறிது தனிமை தேவைப்படலாம். நான் அங்கே சென்று அமர்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ரிஷி சற்றுத் தள்ளி இருந்த தருவின் நிழலை நோக்கிச் சென்றபோது, அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. எதற்கு என்று நான் கேட்கவோ, அதற்கு அவன் விடை சொல்லவோ அவசியமே இல்லை என்பது போல இருந்தது, அவன் திரும்பிப்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 98

98. மும்முனைக் கருவி நதியோரமாகவே நடந்துகொண்டிருந்தோம். ஒரு நதி என்பதற்கு அப்பால் அதுவரை சர்சுதியை நான் வேறு எதுவாகவும் கருதியதில்லை. சர்சுதி என்றல்ல. எல்லா நதிகளும் அப்படித்தான். கிராத குலம் வசிக்கும் ஹிமத்தின் மடியிலிருந்து எத்தனையோ நதிகள் புறப்படுகின்றன. கண் திறந்து பார்க்குமிடமெல்லாம் நதிகள்தாம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 97

97. பிரம்ம லிபி ருத்ர மேருவின் அடிவாரத்தில் சர்சுதியின் கரையில்தான் படுத்திருந்தேன். பல நாள்களாக உறக்கமற்று இருந்ததனாலோ, எல்லாம் போதுமென்ற நிச்சலனம் உண்டாகியிருந்ததனாலோ, வழக்கத்தினும் அதிகம் பசித்து, வழக்கத்தினும் அதிகம் உண்ட களைப்பினாலோ தெரியவில்லை. எவ்வளவு நேரம் உறங்கினேன் என்றே தெரியாமல்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 96

96. காணிக்கை நடந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் நடப்பது போலத் தெரியவில்லை. இடம் பெயர்ந்துகொண்டே சென்றது. நிலக்காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஆயினும் எங்கோ ஓரிடத்தில் நிலைகொண்டிருப்பது போலத் தோன்றியது. இரவு பகல் மாற்றம் தெரிந்தது. களைப்புத் தோன்றவில்லை. கால் வலிக்கவில்லை. உறங்க வேண்டுமென்று...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 95

95. வந்தவர்கள் என் உடலற்ற தேகம் சிலிர்க்கிறது. மனமற்ற சிந்தையில் ஒரு பழைய மணம் மெலிதாக நுழைந்து சுழல்கிறது. காரணம் தெரியாமல் உள்வெளியில் எதுவோ ஒன்று குதியாட்டம் போடுகிறது. இது நான் எதிர்பாராத உணர்ச்சி. எதனால் அப்போது அப்படி ஆனதென்று எனக்கு விளங்கவில்லை. வெளியெங்கும் அலைந்து திரிந்து அடங்கித்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!