Home » திசையெலாம் தமிழர் – 3
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 3

அரவிந்த் ஶ்ரீனிவாஸ்

முப்பத்தொரு வயதான ஒரு தமிழர் இந்திய இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தபோது உலகம் முழுக்க இருந்து இணையவாசிகள் அரவிந்த் ஸ்ரீனிவாஸை இப்படித் தேடினர்: ‘Who is Aravind Srinivas?’

சென்னை ஐஐடி மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், செயற்கை நுண்ணறிவுத் துறையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவராக அடையாளம் காணப்படும் இவர் தொழில்நுட்பத்தை எதிர்கால இலக்காகக்கொண்டு செயல்படும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு சுமார் இருபத்து இரண்டாயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1994ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த்துக்கு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் சிறுவயதிலிருந்தே ஆர்வம் அதிகம். வீட்டிலிருந்த மின்னணுப் பொருட்கள் எப்படி வேலை செய்கிறதென உண்மையாகவே பிரித்துப் பார்த்துக் கற்றுக்கொண்டவர். தொழில்நுட்ப அறிவும் வணிக உத்திகளும் கைவரப்பெற்றுவிட்டால் வளர்ச்சியின் பாதையில் எந்தத் தடையும் இருக்காது என்பதைக் கல்லூரியில் படிக்கும்போதே உணர்ந்தவர் அரவிந்த்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!