பத்மா லட்சுமி
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் ஒரு கஃபேவில் தனது நண்பருடன் உணவருந்திக்கொண்டிருந்தார் பத்மா லட்சுமி. மாடலிங் முகவர் ஒருவர் கண்சிமிட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். பத்மா லட்சுமி ஃபேஷன் உலகிற்குள் நுழைய அது மட்டுமே போதுமானதாக இருந்தது. மாட்ரிட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த பத்மாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் இப்படித்தான் நிகழ்ந்தது.
இமானுவேல் உங்காரோ, ரால்ஃப் லாரன், ஆல்பர்ட்டா ஃபெரட்டி. இவர்களெல்லாம் உலகின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள். அவர்கள் தயாரித்த ஆடைகளை அணிந்து ஃபேஷன் ஷோக்களில் ஒய்யாரமாக நடந்து வந்த பத்மா லட்சுமியை ஃபேஷன் உலகம் கொண்டாடியது. ராபர்டோ கவாலி, வெர்சஸ் போன்ற உலகின் முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
புகழ்பெற்ற பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் இடம்பெறுவது மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு வாழ்நாள் லட்சியம். காஸ்மோபொலிட்டன், ஹார்பர்’ஸ் பஜார்,மேரி க்ளைய்ர், நியூஸ் வீக் ட்வுன் அண்ட் கன்ட்ரி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளின் அட்டைப்படங்களை பத்மாவின் புகைப்படங்கள் அலங்கரித்தன. பாரீஸ், மிலன் அமெரிக்கா என அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக இருந்த முதல் இந்திய மாடலாக பத்மா லட்சுமி இருந்தார்.










Add Comment