வி. எஸ். ராமச்சந்திரன்
விளையனூர் ராமச்சந்திரன் என்று அறியப்படும் வி. எஸ். ராமச்சந்திரன், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூளை மற்றும் அறிவாற்றல் மையத்தின் இயக்குநராகவும் பேராசிரியராகவும், சால்க் இன்ஸ்டிடியூட்டில் கௌரவப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
ஐ.நா சபையில் அதிகாரியாகப் பணியாற்றிய வி. எம். சுப்ரமணியன், லலிதா சுப்ரமணியன் தம்பதியினருக்கு மகனாக 1951ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். லலிதா சுப்ரமணியனின் தந்தை அல்லாடி கிருஷ்ணசாமி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வரைவுக்குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
சட்டம், அரசியல், கணிதம், இயற்பியல் எனப் பல துறைகளில் மேதைகளைக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால் இயல்பாகவே அவருக்குப் பன்முகத்தன்மை கொண்ட சிந்தனை வாய்த்தது.










Add Comment