விவேக் ராமசாமி
2025ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும், அரசு நிர்வாகத்தைச் சீரமைக்கவும் தேவையில்லாத செலவினங்களைக் குறைக்கவும் ஒரு குழுவை உருவாக்கினார் டிரம்ப். அந்த அமைப்புக்கு எலான் மஸ்க்கோடு இன்னொருவரையும் பொறுப்பாளராக நியமித்தார். அவர்தான் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான விவேக் ராமசாமி.
விவேக்கின் தந்தை கணபதி ராமசாமி, அடிப்படையில் ஒரு பொறியாளர். கோழிக்கோடு தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியிலிருந்து பாலக்காட்டில் குடியேறியவர்களுள் இவருடைய குடும்பமும் ஒன்று. விவேக்கின் தாயார் கீதா, பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். மனநல மருத்துவராக இருக்கிறார். இவர்கள் பாலக்காட்டில் வடக்கஞ்சேரிப் பகுதியில் வசித்தனர். 1970களில் கணபதி ராமசாமியும் அவருடைய சகோதரர்களும் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தனர். அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்து, காப்புரிமை சார்ந்த சட்ட நிபுணராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார் கணபதி ராமசாமி.
விவேக் ராமசாமி 1985ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளியில் அவர் தனது வகுப்பிலேயே முதன்மையான மாணவராகவும், தேசிய அளவில் தகுதி பெற்ற டென்னிஸ் வீரராகவும், ஒரு சிறந்த பியானோ கலைஞராகவும் இருந்தார்.










Add Comment