Home » திசையெலாம் தமிழர் – 28
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 28

சஞ்சய் சுப்ரமணியம்

நவீன காலத்தின் தொடக்க கட்டத்தை ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வரலாற்றாய்வாளர் சஞ்சய். இந்தியப் பெருங்கடல், ஐரோப்பியக் காலனித்துவப் பேரரசுகள், உலகளாவிய வரலாறு குறித்த பல கட்டுரைகளையும், புத்தகங்களையும், தொகுப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார்.

சஞ்சய் சுப்ரமணியம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UCLA) வரலாற்றுத் துறையின் சிறப்புப் பேராசிரியராகவும், சமூக அறிவியலுக்கான இர்விங் அண்ட் ஜீன் ஸ்டோன் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

சஞ்சய்யின் தந்தை சுப்ரமணியம், இந்தியாவின் உத்தி சார்ந்த விவகாரங்களின் தந்தை (Father of Strategic Affairs) என்று அழைக்கப்படுகிறார். இந்தியக் குடிமைப்பணி அதிகாரியாகவும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராகவும் இருந்தவர். இந்தியாவின் அணுசக்திக் கொள்கையையும் பாதுகாப்பு வியூகங்களையும் வகுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியவர். கார்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவுக்குத் தலைமையேற்றிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!