9. உடம்ப கவனிங்க முதல்ல.
சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவை. அவை போக மீதமிருக்கும் அனைத்துத் துறையினரும் தொழிலாளி வர்க்கத்துக்குள் அடங்குபவர்கள். இதில் அதிகச் சுரண்டலுக்கு உள்ளாகிறவர்கள் உதவி இயக்குநர்கள்.
படப்பிடிப்பின் நடக்கும்போது நடிகர்கள் முதல் லைட்மென் வரை ஒரு கால்ஷீட்டுக்கு இவ்வளவு என்றுதான் சம்பளம். ஒரு கால்ஷீட் என்பது எட்டு மணி நேரம். நடிகர்களுக்கு ஒரே நாளில் பன்னிரண்டு மணி நேரம் அதாவது ஒன்றரை கால்ஷீட் நடிக்க வேண்டி இருந்தால் ஒன்றரை மடங்கு சம்பளம். லைட்மேன் மற்றும் உணவு தயாரிக்கும் ஆட்களுக்கு மட்டும் இந்த ஒன்றரை மணி நேர விதி பொருந்தாது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் “எல்லாருக்கும் முன்னாடி ஸ்பாட்டுக்கு வந்து லைட் எல்லாம் செட் பண்ணிட்டு எல்லாரும் போன அப்புறம் தான் சார் கிளம்பணும். இதுல 1.5 கால்ஷீட் எல்லாம் கட்டுப்படியாகாது சார்” என்பார்கள்.
Add Comment