உக்ரைனின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 2025 ஜூலை மாதத்தில் தன் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இது ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த மிகப்பெரிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம், அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெல்லாக்கின் உக்ரைன் பயணத்துடன் நேரடியாக ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் ஜெலின்ஸ்கி-டிரம்ப் இடையே நடந்த கடுமையான மோதல் நினைவிருக்கிறதா? அதற்குப் பின் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்துப் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில், வாடிகனில் ஏப்ரல் மாதம் போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கின்போது ஜெலன்ஸ்கியும் டிரம்ப்பும் தனிப்பட்ட முறையில் பேசினர். இந்த உரையாடல் அவர்களது உறவை மீண்டும் நிலைப்படுத்த உதவியது.
இந்நிலையில், அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெல்லாக் ஒரு வாரகாலப் பயணமாக உக்ரைன் தலைநகர் கியீவுக்கு வந்தார். இந்த அரசுமுறைப் பயணத்தின்போது ஜெலன்ஸ்கியுடன் நடந்த சந்திப்பில், பொதுமக்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல், கூட்டு ட்ரோன் உற்பத்தி, ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் ஆயுதக் கொள்முதல் ஒத்துழைப்பு போன்றவை விவாதிக்கப்பட்டன.















Add Comment