14 . இரண்டு இராகவையங்கார்கள்
தமிழுலகம் அறிந்த தமிழறிஞர்களில் இராகவையங்கார் என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவெனில் அந்தப் பெயரில் இரண்டு தமிழறிஞர்கள் இருந்தார்கள். ஒருவர் பெரும்புலவர் மு.இராகவையங்கார், இன்னொருவர் மகாவித்துவான் இரா.இராகவையங்கார். இந்த இரண்டு இராகவையங்கார்களும் ஒரே காலகட்டத்தில், ஒரே குடும்பத் தொடர்பும் கொண்டிருந்தார்கள் என்பது இன்னொரு சிறப்பு. வயதில் மூத்த இரா.இராகவையங்கார் மகாவித்துவான். மதுரை சேதுபதிப் பள்ளியில் முதல் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். அவர் மாமா. இரண்டாமவர் மு.இராகவையங்கார். அவர் மதுரையில் அமைந்த நான்காம் தமிழ்ச்சங்க உபாத்தியாயராகத் தனது தமிழ் வாழ்வைத் தொடங்கியவர். இரண்டாமவர் முதலாமவருக்கு மருமான். இருவரும் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் குறிப்பிடத் தக்க பங்காற்றியிருக்கிறார்கள்.
எனவே இந்தக் கட்டுரையில் மாமன், மருமான் என இரண்டு இராகவையங்கார்களது தமிழ்த் தொண்டையும் இணைத்துப் பார்த்து விடுவோம்.
Add Comment