Home » உரி – 169
உரி • நாள்தோறும்

உரி – 169

169. தெளிந்தவன்

சித்தர்கள் என்போரை உன் மனத்தினுள் நீ என்னவாக உருவகம் செய்து வைத்திருக்கிறாய் என்று உதுமானி நாயனார் சார்வாகனிடம் கேட்டார்.

அன்றைக்கு ஆன்பொருநை நதிக்கரையில் கருவூராரிடம் கோபித்துக்கொண்டு சார்வாகன் எழுந்து சென்றுவிட்ட பிறகு அவனைப் பிடித்து இழுத்து அமர வைத்துக் கருவூராரோ நாயனாரோ ஆற்றுப்படுத்தும் தருணம் எப்போது வருமென்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அன்று முழுதும் சார்வாகன் வஞ்சி மாநகரைச் சுற்றிச் சுற்றி வந்தானே அல்லாமல் கருவூராரின் ஆசிரமத்துக்கோ, கீரைப் படப்பைக்கோ செல்லவேயில்லை. அடுத்த நாள் விடியும் நேரம் நடந்து களைத்தவன், படப்பைக்கு வந்து பனையடி கற்படுக்கையில் கால் நீட்டிப் படுத்துக்கொண்டான். அவன் வந்ததை அப்போதே கவனித்த உதுமானி நாயனார், நெருங்கி வந்து உண்பதற்கு ஏதேனும் வேண்டுமா என்று அன்போடு கேட்டார். உறங்கினால் போதும் என்று அவன் சொன்னதால், சரி என்று சொல்லிவிட்டுக் குடிசைக்குள் சென்றுவிட்டார்.

பரிதி உச்சி வானுக்கு வந்த நேரத்தில் சார்வாகன் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். பிறகு கடன்களை முடித்துவிட்டுக் காளத்தி அளித்த உணவினை உட்கொண்ட பின்பு உதுமானி நாயனாரிடம் வந்து அமர்ந்து,

உமது குருநாதர் வருத்தத்தில் இருப்பாரா? ஆசிரமத்துக்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா?

என்று கேட்டான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!