உரு வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
மெட்ராஸ் பேப்பரில் கோகிலா எழுதித் தொடராக வந்த தொடர் ‘உரு’. கணினித் தமிழின் முன்னோடியான முத்து நெடுமாறனின் வாழ்க்கைக் கதையைச் சொல்வது. இந்தத் தொடரைக் காலச்சுவடு பதிப்பகம் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறது. விழா நடந்த இடத்தில்
நிகழ்ச்சியைக் குறித்த போஸ்டர்கள் எதுவும் ஒட்டப்படவில்லை என்றாலும், மெட்ராஸ் பேப்பர் குழுவினர் வாசலிலேயே நின்று வருபவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றனர்.
குளிரூட்டப்பட்ட அறை, இதமான குஷன் இருக்கைகள், U வடிவ இருக்கை ஏற்பாடு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட டிஜிட்டல் திரைகள், துல்லியமான ஒலி அமைப்பு எனத் தரமாக இருந்த அறையின் வசதிகள், தொந்தரவில்லாமல் நிகழ்ச்சியைக் கவனிக்க உதவின. வருகிறேன், வந்து கோண்டே இருக்கிறேன் என்று சொன்னவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சரியாக மூன்று மணிக்கு விழாவை ஆரம்பித்துவிட்டார்கள்.















Add Comment