சகோதரிகள் இருவர், இங்கிலாந்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கினர். பின்னர் அந்தத் தீவையே தங்கள் வாழ்விடமாக அமைத்துக்கொண்டனர். தங்களுக்குப் பிறகும் அதன் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க விரும்பி ஓர் அறக்கட்டளைக்கு உயிலாக எழுதி வைத்தனர். இன்று அந்தத் தீவு, ஏராளமான கடற்பறவைகள், பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக...
Author - காயத்ரி. ஒய்
![]()
8 A.M. Metro என்றொரு இந்தித் திரைப்படம். அதில் நாயகிக்கு ரயில் பயணம் என்றால் பயம். தனியாக ரயிலில் செல்வதை அறவே தவிர்த்து விடுவாள். அப்படிப்பட்டவளுக்குத் தினமும் மெட்ரோவில் சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கலக்கத்துடன் நிலையத்துக்கு வருவாள். இதயம் தடதடவென அடித்துக் கொள்ளும். நெற்றியில்...
மெட்ரோவுக்குள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வது கிடையாது. ஆனாலும் தினமும் ஒரே நேரத்தில் பயணிப்பவர்களுக்கு நடுவே ஒரு மௌன அறிமுகம் நிகழ்ந்து விடுகிறது. பெயர் தெரியாமலேயே முகம் மட்டும் பரிச்சயமாகத் தெரியும். நிற்கும் தோரணை, அணியும் உடைகள், அணிகலன்கள், பேசும் நபர்களைக் கொண்டு இயல்பாக ஓர்...
மெட்ரோவை ஒரு சொகுசுத் திரையரங்கம் என்று சொல்லலாம். மத்திய வர்க்கம் முதல் உயர்தட்டு மக்கள் வரை, இளைஞர்கள் முதல் இணையர்கள் வரை விரும்பி வரும் ஓர் இடம். பெட்டிக்குப் பெட்டி வண்ணத் திரையும் உண்டு. தினமும் அதில் அம்புக்குறி நகரும் ஒரே படம்தான். திரைப்படங்களில் வருவதுபோன்ற நவீன ஃபேஷனை மெட்ரோவிலும்...
மெட்ரோவுக்குப் படிக்கட்டுகள் கிடையாது. நடைமேடையிலிருந்து பெட்டிக்குள் முட்டி வலிக்க ஏறிச் செல்ல வேண்டாம். எட்டி ஓரடி எடுத்து வைத்தாலே போதும். நடைமேடை இடைவெளிகளும் மிகக் குறுகியவை. சுரங்கப் பாதை நிலையங்களில் தண்டவாளங்களின் இருபுறமும் பாதுகாப்புக்காகக் கதவுகள் போட்டிருப்பார்கள். இப்படி ஏராளமான...
மெட்ரோ பயணம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சொகுசு. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் விமான நிலையத்தில் இருப்பது போன்ற சொகுசை அங்கு அனுபவிக்கலாம். பெட்டிக்குள்ளும் நிலையத்திலும் தண்ணென்ற குளிர்ச்சி. ஏறி இறங்குவதற்குத் தோதாக எஸ்கலேட்டர், விசாலமான மின்தூக்கிகள். பளபளப்பான டைல்ஸ் தரை. பாதுகாப்புப்...
ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ‘ஒன்பது ஆண்டுகள் முன்னணி நிறுவனமொன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். அழுத்தம், மன உளைச்சலுடன் எப்போதும் பதற்றமாகவே இருக்கும். எனவே அந்தப் பணியைத் துறந்துவிட்டேன். இப்போது மன நிம்மதியுடன் இருக்கிறேன்...
மழை நாள்களில் மெட்ரோ ரயில் பயணம் ஒரு வரம்தான். ஜன்னல் வழியாக சாரல் அடிக்காது. சட்டை நனையாது. ஓட்டைப் பேருந்துகள்போல உள்ளே ஒழுகாது. ஏசி குழாயிலிருந்து எப்போதாவது தண்ணீர் சொட்டும் என்பது வேறு விஷயம். ஆனால் நனைந்தவர்கள் மழையின் ஈரத்தை உள்ளே கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது. எல்லா நிலையங்களிலும்...
மெட்ரோ நிலையங்களில் நடைமேடைகளும் பளிச்சென்று இருக்கும். கூட்டம் அதிகம் இருந்தாலும் இரைச்சல் இருக்காது. சுற்றிலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆண், பெண் எனக் குறைந்தது இரண்டு ஊழியர்கள் நடைபாதையை மேற்பார்வை செய்வார்கள். சுரங்கப்பாதை நிலையங்களில் தண்டவாளத்துக்கு இருபுறமும் கறுப்புக்...













