கருவைச் சுமந்து வளர்த்து குழந்தைகளைப் பெறுவது பெண்கள் என்றாலும், அந்தக் கருவை எப்போது சுமப்பது என்பதற்கான உரிமை பெண்களுக்கு இல்லை.
ஒவ்வொரு நாட்டில் அவர்களுக்கு ஒவ்வொருவித அழுத்தமும், மறைமுகமாக அல்லது நேரடியாக உரிமை மறுக்கப்படுகிறது.
இந்தியாவில், சட்டபூர்வமாக எல்லாவிதமான உரிமைகளும் இருந்தாலும், உறவினர்கள், சமூகம் கணவனின் பெற்றோர் எனப் பலராலும் மிகுந்த அழுத்தம் தரப்படுகிறது. பெண் குழந்தை எனத் தெரிந்தால், நடக்கும் கருக்கலைப்புகள், உரிமம் பெறாத மருத்துவர்கள் அன்றி மறைமுகமாக நடக்கும் கருக்கலைப்புகள் எனப் பலவித பிரச்சினைகள் இருக்கின்றன.
superb madam..exhaustive and interesting take on a sensitive topic