“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத்.
வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு முன்னிலை வகித்த தசாப்தம் அது. யூரி ககாரின் விண்ணில் ஒரு முழுச் சுற்றுச் சுற்றி வந்தார். அமெரிக்கா உடனே அலான் ஷெஃபர்டை அனுப்பியது. ஆனால் அவர் புவியின் சுற்றுப் பாதையை அடைய முயன்றாலும், சுற்றிப் பயணிக்கவில்லை. யூரி உலகில் பேசப்பட்ட அளவு ஆலன் பேசப்படவுமில்லை.
அடுத்த ஆண்டே அமெரிக்க அதிபர் கென்னடி, முப்பத்தைந்நாயிரம் பேர் கூடியிருந்த மகா சபையில் ஒரு சபதம் போடுகிறார். “இந்தத் தசாப்தம் முடிவதற்குள் அமெரிக்கா, சந்திரனில் கால் வைத்தே தீரும்”
Add Comment