நாம் செய்ய வேண்டிய பணிகள் அட்டவணையில் எந்த தர வரிசையில் இருக்கின்றன என்பது அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாறும். உதாரணமாக, சில காரியங்கள் உங்களின் சக்திக்குள் மட்டும் அல்லாது வேறு புறக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைகளின் பள்ளியில் ஏதேனும் திட்டம் வரையச் சொல்லியிருந்தால், அவர்கள் கொடுக்கிற கெடு உங்கள் சக்தியை மீறியது. ஆனால் அந்த திட்டத்திற்கான முகாந்திரங்களைச் செய்வது உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. குழந்தைகளிடம் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லி அதைச் செய்ய உதவலாம். அதற்கேற்ற முன்னுரிமை அதன் காலக்கெடுவை பொறுத்து அமையும்.
இதுவே நிறுவனங்களில் திட்டங்கள் கூட முன்னுரிமைப்பட்டியலில் மேலும் கீழும் நகரும்.
ஒரு நிறுவனத்தை மாற்ற உதவும் முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற மூத்த நிர்வாகிகளுக்கு உதவி தேவை. உதாரணமாக, முதன் முதலில் செயற்கை நுண்ணறிவின் உதவி கொண்டு chatbot வெளியிடப்பட்டது. உடனே கூகிள் அவசரப்பட்டு அவர்களுடைய பார்ட்-ஐ வெளியிட நிறைய குழப்பங்கள். எந்த திட்டம் எப்போது எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என முடிவெடுப்பது நிறுவனங்களின் சந்தைப்படுத்தலை பாதிக்கச் செய்யும்.
Add Comment