14. இரண்டு ஆங்கிலேயர்கள்
BA படிப்பின் இரண்டாம் பகுதிக்காகக் கோலாப்பூர் ராஜாராம் கல்லூரியிலிருந்து புனே டெக்கான் கல்லூரிக்குச் சென்ற கோகலே சில மாதங்களுக்குள் மீண்டும் கோலாப்பூருக்குத் திரும்பிவிட்டார். ஆனால், அந்த ஆண்டின் இறுதித் தேர்வை எழுதுவதற்காக அவர் புனேவைத் தாண்டி மும்பை நகருக்குச் (அப்போது அதன் பெயர் பம்பாய்) செல்லவேண்டியிருந்தது.
கோகலே என்னதான் கல்லூரி மாணவராக இருப்பினும், அடிப்படையில் அவர் இன்னும் அப்பாவிக் கிராமத்துச் சிறுவராகத்தான் இருந்தார். மும்பையைப் போன்ற ஒரு பெருநகரத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவருடைய உலக அறிவு வளர்ந்திருக்கவில்லை.
நல்லவேளையாக, கோகலேவுடன் வேறு சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காக மும்பைக்கு வந்திருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து தங்கியதால் கோகலேவுக்குப் பெரிய சிக்கல் எதுவும் உண்டாகவில்லை.
ஆனால், அதே நண்பர்கள் சரியான விளையாட்டுப் பேர்வழிகளாகவும் இருந்தார்கள். அவர்கள் கோகலேவின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு சிறிய குறும்பு செய்யத் தீர்மானித்தார்கள்.










Add Comment