Home » ஆசான் – 15
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 15

15. இன்னும் கொஞ்சம் படிப்பு

அன்றைய இந்தியாவில் BA பட்டம் என்பது பல நல்ல வேலைகளுக்கான கதவுகளைத் திறக்கக்கூடியது. கோகலேவின் அப்போதைய குடும்ப நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவர்களுக்கு அது ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், அதோடு நின்றுவிடாமல் இன்னொரு படி முன்னேறினால், இன்னும் நல்ல பொறுப்புகளைக் குறிவைக்கலாம், மேலும் வசதியாக வாழலாம், சமூகத்தில் கூடுதல் மதிப்பைப் பெறலாம்.

அதே நேரம், அந்த உயர்படிப்புகளுக்கு நிறையச் செலவாகும். ஏற்கெனவே பல ஆண்டுகளாக அண்ணனை, அண்ணியைத் தொந்தரவு செய்தாகிவிட்டது. இனிமேலும் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்காமல் மேலும் சில ஆண்டுகள் அவர்களுக்குச் சுமையாக இருப்பதா?

கோகலே தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்திருந்தார். அதே நேரம், இன்னும் கொஞ்சம் படிக்கவேண்டும் என்கிற உண்மையான ஆவலும் அவருக்குள் இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!