Home » ஆசான் – 16
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 16

16. இந்தியர்களுக்காக ஒரு பள்ளி

புணேவில் கோகலேவுக்கு என்ன வேலை கிடைத்தது?

‘கோகலே நினைத்திருந்தால் அப்போதே ஓர் அரசு வேலையில் சேர்ந்திருக்கலாம், நன்றாகச் சம்பாதித்திருக்கலாம். அவர் சட்டத் துறையில் நுழைவதற்கும் அது உதவியாக இருந்திருக்கும்’ என்கிறார் கோகலேவின் மாணவரும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான T. K. சகானி.

அரசு வேலை கிடைக்காவிட்டாலும், தன்னுடைய BA பட்டத்தை வைத்து அவர் பல நல்ல தனியார் வேலைகளில் அமர்ந்திருக்கலாம். ஆனால், கோகலே விரும்பித் தேர்ந்தெடுத்தது ஆசிரியர் வேலையை, அதுவும் மாதத்துக்கு முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில்.

பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய கோவிந்த ராவால் எழுத்தர் வேலை பார்த்து மாதத்துக்குப் பதினைந்து ரூபாய் சம்பாதிக்கமுடிந்தது என்றால், பட்டதாரியான கோகலே இன்னும் நிறையச் சம்பாதித்திருக்கலாம். ஆனால், அவருடைய மனம் இந்த வேலையைத்தான் விரும்பியது. அதற்குக் காரணம், திலகரும் ஆகர்கரும்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!