3. வாகோபா
கோகலேவின் தந்தை வழிப் பாட்டனார் பெயர் ஶ்ரீதர் ராவ். இவர் சிவதாஸ் பன்ட் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஶ்ரீதர் ராவுக்கு அனந்தாஜி பன்ட், கிருஷ்ண ராவ் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். இந்நிலையில் இவர்களுடைய தாய், அதாவது, ஶ்ரீதர் ராவின் மனைவி இறந்துவிட, அவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டார்.
ஶ்ரீதர் ராவின் இரண்டாவது திருமணத்தை அவருடைய மகன்கள் விரும்பவில்லை. அதனால், அவர்கள் தங்களுடைய தந்தையிடமிருந்து பிரிந்து வந்துவிட்டார்கள், ‘இனிமேல் உனக்கு நீ, எனக்கு நான். இதுமட்டும்தான் நம்முடைய குடும்பம்’ என்று தீர்மானித்துக்கொண்டுவிட்டார்கள்.
கிருஷ்ண ராவ் சிறுவயதிலிருந்தே வலுவான தோற்றம் கொண்டவர். அதற்கேற்றபடி துணிகரச் செயல்களில் ஈடுபடுகிற ஆர்வமும் அவருக்கு இருந்தது. இதனால், கிராமத்தில் எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கினார்கள், அவரை ‘வாகோபா’ (புலி) என்ற பட்டப்பெயரால் அழைத்தார்கள்.










Add Comment