4. அறிவாளித் தம்பி
1866ம் ஆண்டு மே 9ம் நாள் மாலை நேரம். அன்றைய பம்பாய் மாகாணத்தின் இரத்தினகிரி மாவட்டம், சிப்ளூன் வட்டத்திலிருந்த கோட்லுக் என்ற கிராமத்தில், கிருஷ்ண ராவுக்கும், சத்யபாமாவுக்கும் இரண்டாவது மகனாகக் கோபால கிருஷ்ண கோகலே பிறந்தார்.
கோட்லுக்கில் பிறந்தாலும், கோகலே வளர்ந்ததெல்லாம் காகள் என்கிற இன்னொரு கிராமத்தில்தான். அங்குதான் கிருஷ்ண ராவ் வேலை செய்துகொண்டிருந்தார். அவருடைய குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுடைய பெரிய குடும்பத்தைச் சத்யபாமா நடத்திவந்தார்.
கிருஷ்ண ராவுக்கு அவருடைய சொந்த ஊரான தாம்மண்மலாவில் கொஞ்சம் நிலம் இருந்தது. ஆனால், அந்த நிலம் வளமானதாக இல்லை. அந்தப் பகுதியின் நில அமைப்பால், பெய்கிற மழை நீரெல்லாம் நேராக அரபிக் கடலை நோக்கி ஓடி விடும். அதனால், அந்த நிலத்தை நம்பி விவசாயம் செய்து பிழைப்பது கடினம்.









Add Comment