Home » ஆசான் – 43
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 43

43. சிந்திய சொற்கள்

புணேவில் பிளேக் நோய் பரவியதைப்பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினர் எடுத்த கடுமையான நடவடிக்கைகளைப்பற்றியும் இங்கிலாந்திலிருந்த கோகலேவுக்கு வரிசையாகப் பல கடிதங்கள் வந்தன. இந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றும் அந்நகரில் நடக்கும் கொடுமைகளை நுணுக்கமான தகவல்களுடன் விவரித்தன, அரசாங்கம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டின.

கோகலே வழக்கமாகவே மிகவும் உணர்ச்சிவயப்படுகிறவர். இந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க அவருக்கு இரத்தம் கொதித்தது. சில உருக்கமான கடிதங்களைத் தன்னுடன் இருந்தவர்களுக்கும் படித்துக்காட்டி வேதனைப்பட்டார் அவர்.

இந்தக் கடிதங்களை எழுதியவர்கள் அனைவரும் கோகலேவுக்கு நன்கு தெரிந்தவர்கள், ஊரில் மிகவும் மதிக்கப்பட்ட ஆளுமைகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், இதழாளர்கள், இன்னும் பல பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள். அவர்கள் தாங்கள் நேரில் பார்த்ததை, சொந்தமாக எதிர்கொண்டதை எழுதுவதுபோல் அந்தக் கடிதங்களை எழுதியிருந்தார்கள். அதனால், அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று கோகலே நம்பிவிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!