5. பணிவும் உறுதியும்
அண்ணனுக்கு இரவில் விழித்திருந்து படிக்க விருப்பமில்லை, அதனால், தன் தம்பியும் இரவில் படிக்கக்கூடாது என்று கட்டளையிடுகிறார். அந்தத் தம்பியும் அதை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்.
இந்தப் பாசக் கதை படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்படித் தவறான கட்டளைகளுக்கெல்லாம் பணிந்துபோகிற தம்பி எப்படிப் பின்னாட்களில் பெரிய தலைவரானார்?
சிறுவயதிலிருந்தே கோகலே மூத்தவர்கள்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அந்த மதிப்பு அவருடைய பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் செய்கையிலும் தெளிவாக வெளிப்பட்டது.










Add Comment