52. மக்கள் குரல்
1900 ஜனவரி 24 அன்று, கோகலே பம்பாய்ச் சட்டப் பேரவையில் அலுவலர் அல்லாத உறுப்பினராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பேரவை நடவடிக்கைகளுக்குப் புதியவரான கோகலே அங்கு நடந்த விவாதங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார். அந்த முதல் நாளிலேயே அவர் எட்டுக் கேள்விகளை எழுப்பியதாகக் குறிப்பு இருக்கிறது. அடுத்த இரண்டு கூட்டங்களில் அவர் மேலும் பன்னிரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இன்றைய இந்திய மாநிலங்களில் சட்டப் பேரவைகள் ஆண்டுமுழுவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால், அப்போதைய பம்பாய்ச் சட்டப் பேரவை எப்போதாவதுதான் கூடும். ஓர் அமர்வுக்கும் இன்னோர் அமர்வுக்கும் நடுவில் போதுமான இடைவெளி இருக்கவேண்டும் என்கிற விதியை அவர்கள் கண்டிப்பாகப் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள்.










Add Comment