Home » ஆசான் – 58
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 58

58. நிதி சால சுகமா?

உயர்நிலைச் சட்டப் பேரவையில் ஆண்டு முழுவதும் பலவிதமான விவாதங்கள் நடைபெறும். ஆனால், அவை அனைத்தையும்விட முதன்மையானது, சுவையானது, எல்லாராலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவது, நிதி நிலை அறிக்கையின்மீதான விவாதம்தான்.

பிரிட்டிஷ் இந்தியா ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான நிதியாண்டு முறையைப் பின்பற்றியது. அதனால், ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் முந்தைய நிதியாண்டில் இந்தியா எப்படிச் செயல்பட்டது, எந்தெந்த வகைகளில் எவ்வளவு வரி திரட்டப்பட்டது, அது எப்படிச் செலவிடப்பட்டது, அடுத்த நிதியாண்டில் எந்தெந்தச் செலவுகளுக்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்படவிருக்கிறது என்பது போன்ற தகவல்களைத் தொகுத்து ஒரு விரிவான நிதி நிலை அறிக்கை உருவாக்கப்படும். உயர்நிலைச் சட்டப் பேரவையின் நிதி உறுப்பினர் (இன்றைய நிதி அமைச்சரைப் போன்றவர்) இந்த நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசுவார். அதன்பிறகு, மற்ற உறுப்பினர்கள் அதைப்பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள். நிதி உறுப்பினர் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

மேலுள்ள அனைத்தும் இன்றைய (விடுதலை பெற்ற) இந்தியாவிலும் அதேபோல் நடக்கின்றன. ஒரே வேறுபாடு, அடுத்த நிதியாண்டுக்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள செலவுகளையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டு வாக்களிக்கவேண்டும். அதாவது, மக்களின் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டால்தான் அரசாங்கத்தால் தன்னுடைய நிதி நிலை அறிக்கையைச் செயல்படுத்தமுடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!