6. மாதம் எட்டு ரூபாய்
கோவிந்த ராவ் சிறிய வயதில் தன் குடும்பத்துக்காகப் பெரிய தியாகம் செய்தவராக இருக்கலாம். ஆனால், பள்ளிப் படிப்பை முடிக்காத ஓர் இளைஞருக்கு என்ன பெரிய வேலை கிடைத்துவிடப்போகிறது?
கிருஷ்ண ராவ் குடும்பத்தை அறிந்த வி. பி. வைத்யா என்ற பெரிய மனிதர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அவருடைய பரிந்துரையால் கோவிந்த ராவுக்குக் காகளில் கார்கூன் (எழுத்தர்) வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் பதினைந்து ரூபாய்.
கிட்டத்தட்ட இதே நேரத்தில் சத்யபாமாவும் அவருடைய மகள்களும் காகளுக்குத் திரும்பினார்கள். கோவிந்த ராவின் சம்பளத்தில் அவர்களுடைய குடும்ப வண்டி மீண்டும் ஓடத் தொடங்கியது.









Add Comment