68. ரொம்ப நல்லவர்
இந்திய ஊழியர் சங்கத்தைப்பற்றிப் பிரிட்டிஷ் அரசாங்கம் என்ன நினைத்தது?
கோகலே இந்திய மக்களை அரசியல் பணிக்கு ஆயத்தப்படுத்துவதற்காகத்தான் இந்தச் சங்கத்தைத் தொடங்கினார். அதைப்பற்றிய தொடக்க அறிக்கையிலேயே இந்தச் சங்கம் பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக்கொள்கிறது என்றும், அதன் பணிகள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் அமையும் என்றும் அவர் தெரிவித்துவிட்டார். ஆனால், அவர் தான் சொல்வதைத்தான் செய்வார், வேறெதையும் செய்யமாட்டார் என்று பிரிட்டிஷ்காரர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அரசியல் பயிற்சி என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிற ஓர் இளைஞர் படையை அவர் உருவாக்கிவிடுவாரோ என்று அவர்கள் குறுகுறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இத்தனைக்கும் கோகலேமீது அவர்கள் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள். ஆனால், அவருடைய நாட்டுப் பற்று மிக ஆழமானது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால், ஒருவேளை, அவர் வேறு பக்கம் சென்றுவிடுவாரோ, தங்கள் ஆட்சி உலுக்கப்படுவதற்குக் காரணமாகிவிடுவாரோ என்று அவர்களுக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.










Add Comment