7. தயிருக்காகப் பட்டினி
கோகலேவுக்குத் தயிர் என்றால் ரொம்பப் பிடிக்கும். தயிரை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிற ‘ஶ்ரீகண்ட்’ என்கிற இனிப்பும் அவருக்கு விருப்பமானது.
ஆனால், அவர் கோலாப்பூர் ராஜாராம் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரால் தயிர் சாப்பிடமுடியவில்லை, வேறு சில சுவையான உணவுப் பண்டங்களையும் சாப்பிடமுடியவில்லை.
ஏனெனில், அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்தில் இரண்டு விதமான உணவுத் திட்டங்கள் இருந்தன. முதல் திட்டத்தில் சேர்வோருக்கு வெறும் சாப்பாடும் காய்கறிகளும்தான் கிடைக்கும். அதற்கு அவர்கள் மாதந்தோறும் நான்கு ரூபாய் செலுத்தவேண்டும். இரண்டாவது திட்டத்தில் சேர்வோருக்குக் கூடுதலாகத் தயிரும் வேறு சில தின்பண்டங்களும் வழங்கப்படும். அதற்கு அவர்கள் நான்கரை ரூபாய் செலுத்தவேண்டும். அதாவது, தயிர் சாப்பிட விரும்புவோருக்கு அரை ரூபாய் (எட்டு அணாக்கள்) கூடுதல் கட்டணம்.









Add Comment