71. ஆங்கில மயிலே, இறகு போடு
வங்காளிகளுக்குத் தங்களுடைய மொழி, பண்பாடு, இலக்கியம், இசை, சமையல், பழக்கவழக்கங்கள் என அனைத்தைப்பற்றியும் பெருமிதம் உண்டு. அது நியாயமான பெருமிதம்தான். ஏனெனில், அன்றைய இந்தியாவின் மற்ற பல பகுதிகளைக்காட்டிலும் அவர்கள் மேம்பட்டவர்களாக இருந்தார்கள்.
இப்போது, பிரிட்டிஷ் அரசாங்கம் வங்க மாகாணத்தை இரண்டாகப் பிரிக்கும்போது, வங்காளிகளையும் இரண்டாகப் பிரித்துவிட்டார்கள். இதனால் தங்களுடைய தனித்துவமான அடையாளம் துண்டுபடுவதாக அவர்கள் உணர்ந்தார்கள். ‘தலைமுறை தலைமுறையாக வங்காளிகள் என்கிற உணர்வால் ஒன்றுபட்டிருந்தவர்கள் நாங்கள். நேற்றைக்கு எங்கிருந்தோ வந்த ஒருவர் எங்களைப் பிரித்து நிறுத்துவதா?’ என்கிற மிக இயல்பான கேள்வி அவர்களுக்குள் எழுந்தது, அதனால், ‘இந்தப் பிரிவினையை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று போர்க்கொடி தூக்கினார்கள், களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.
ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இப்போதும் இந்தியர்களைப் புரிந்துகொள்ளவில்லை, ‘நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் எங்கள் தீர்மானத்தை மாற்றமுடியாது. வங்காளத்தை இரண்டாகப் பிரித்தே தீருவோம்’ என்று அவர்கள் முரண்டு பிடித்தார்கள், இரும்புக் கரம் கொண்டு பிரிவினைத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றார்கள்.










Add Comment