73. பிளவு
1906 காங்கிரஸ் மாநாடு கொல்கத்தாவில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஓராண்டுக்கு முன்பாக மிதவாதிகளால் முடக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் இம்முறை விழித்துக்கொண்டார்கள், அடங்க மறுத்தார்கள், ‘நாங்களும் காங்கிரஸின் பகுதிதான். எங்களுடைய தீர்மானங்களையும் காங்கிரஸ் மாநாட்டில் முன்வைக்கவேண்டும், நிறைவேற்றவேண்டும்’ என்றார்கள்.
உண்மையில், இந்த ஓராண்டுக்குள் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கூடியிருந்தது. காங்கிரஸ் இயக்கம் இனிமேலும் அவர்களுடைய சிந்தனைகளைப் புறந்தள்ளமுடியாது என்கிற சூழ்நிலை உருவாகியிருந்தது.
ஆனால், மிதவாதிகள் இதைப் புரிந்துகொள்ளவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ‘காங்கிரஸின் குரல் ஒன்றாகத்தான் கேட்கவேண்டும்; அது எங்கள் குரலாகத்தான் இருக்கவேண்டும்’ என்று அவர்கள் பிடிவாதம் பிடித்தார்கள்.










Add Comment