74. கட்டுரைகளும் கட்டுக்கதைகளும்
1908ம் ஆண்டு ஜூன் 24 அன்று, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கருத்துகளை எழுதி, வெளியிட்டுப் பரப்பிய குற்றத்துக்காகத் திலகர் கைது செய்யப்பட்டார்.
ஆங்கிலேயர்கள் இந்தியத் தலைவர்கள், இதழாளர்களுடைய எழுத்துகளுக்காக அவர்களைக் கைது செய்வதும் கருத்துரிமையை முடக்குவதும் வழக்கமாக நடப்பவைதான். அவர்களுக்குத் தங்களைப்பற்றிய விமர்சனங்கள் பொதுவில் பேசப்படுவதும் சிறிதும் பிடிப்பதில்லை, அதனால், விமர்சிக்கிறவர்களுடைய கையை முறுக்குகிற வழக்கத்தை விடாமல் பின்பற்றினார்கள்.
ஆனால், இந்தியர்கள் இதற்கெல்லாம் அஞ்சி அமைதியாக இருந்துவிடவில்லை. இருக்கிற சட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில நேரங்களில் கட்டுப்படாமலும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதற்காகப் பலர் சிறை சென்ற வரலாறும் உண்டு, அவர்களுடைய இதழ்கள் நிறுத்தப்பட்ட கதைகளும் உண்டு. ஆனால், இதையெல்லாம் ஆங்கிலேய ஆட்சியில் இதழ்களை நடத்துகிற தொழிலின் ஒரு பகுதி (Occupational Hazard) என்றே இந்தியர்கள் நினைக்கப் பழகியிருந்தார்கள்.










Add Comment