75. நன்னயம்
திலகரைச் சிறைக்கு அனுப்புவதற்காகக் கோகலே சதி செய்தார் என்று பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த இதழ்களின்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கட்டுரைகளைத் திரும்பப் பெறவேண்டும், அத்துடன், இதன்மூலம் தனக்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்புக்காக ஐந்நூறு ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்று கோகலே கோரினார்.
இந்தப் பணத்தையும் அவர் தனக்காகக் கேட்கவில்லை. தவறு செய்தவர்கள் அதற்கான அபராதத் தொகையைச் சில சமூகச் சேவை நிறுவனங்களுக்குச் செலுத்தினால் போதும் என்று அறிவித்துவிட்டார் அவர்.
திலகர் கைது செய்யப்பட்டதற்கும் கோகலேவுக்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், இந்த அவதூறு வழக்கில் அவர் எளிதாக வெற்றி பெற்றார். அவர்மீது சேற்றை இறைத்த இதழ்கள் ஒவ்வொன்றும் உரிய அபராதத் தொகையைச் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு வெளியானது.










Add Comment