Home » ஆசான் – 76
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 76

76. அன்பே கடவுள்

1885ம் ஆண்டு டெக்கன் கல்லூரியில் ஒரு விழா. அதில் பேசிய ஆகர்கர், ‘பண்பாட்டில் மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. அதைப்பற்றிப் பேசினால் நம்முடைய ஆற்றல்தான் வீணாகும்’ என்றார்.

ஆகர்கரின் கருத்தை ரானடே ஏற்றுக்கொள்ளவில்லை, ‘இன்றைய இளம் தலைமுறையினர் சில மேற்கத்திய எழுத்தாளர்களுடைய தாக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், அதனால் கடவுள்மீதும் மதத்தின்மீதும் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்’ என்று வாதிட்டார்.

இந்த இரு மாறுபட்ட கருத்துகளும் ஆகர்கர், ரானடேவின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்தான். ஆகர்கருக்குக் கடவுள், மதம், அது சார்ந்து முன்வைக்கப்படுகிற சடங்குகள், பிற்போக்கான பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது. அவர் சமூகச் சீர்திருத்தத்தைத்தான் தன்னுடைய ஒரே நோக்கமாகக் கருதினார். அதை உரக்கப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அவர் எப்போதும் தயங்கியதில்லை, அப்படிப் பேசினால் யார் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட்டதில்லை. அதனால், அவரைச் சுற்றியிருக்கிறவர்களும் அவருடைய இந்த நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!